வியாழன், 14 ஆகஸ்ட், 2014

ஸலாவுத்தீன் வரலாறு 13



பாகம் : 24
ஸலாவுத்தீனின் முடிவு
ஸலாவுத்தீன் தன் ஆட்சியை இஸ்லாமிய முறையிலேயே ஆக்கிக் கொண்டார். தடுக்கப்பட்டவைகளை தடுத்து, வெறுக்கத் தக்கவைகளை நிறுத்தினார். எகிப்து ஆட்சியாளரான பின் வீண் படுத்துவதையும், வெட்ககரமானதையும் தடை செய்தார். இவருக்கு முன் எகிப்தில் பண்டிகை, விழாக்காலங்களில் ஆடம்பரமும், மூடவழக்கமும் வழக்கமானதாய் இருந்தது. அதில் ஒன்று ஃபாத்திமிட் ஆட்சியில் நடந்து கொண்டிருந்த நைருஸ் விழா. வசதியானவர்களிடம் வரி வசூலித்து நைருஸ் இளவரசர் மக்கள் சூழ்ந்திருக்க, அருவருக்கத் தக்கவகையில் முத்து மாளிகையில் கூடி நடனமாடுவர். அதை ஃபாத்திமிட் கலீஃபா வேடிக்கைப் பார்ப்பார். பெரும் கூச்சலுடன் தெருவெல்லாம் வைன் என்னும் மதுவகையை நடனமாடி அருந்துவார்கள். எங்கும் வைனும், தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படும். மதிப்புமிக்க மனிதர்கள் போனால் அவர்களின் உடைகள் அழுக்காக்கப்படும். அது போன்ற அருவருப்புகளை சுல்தான் ஸலாவுத்தீன் தடை செய்தார். குர்ஆன் ஓதப்பட்டால், உன்னிப்பாக கேட்டு கண்ணீர் வடிப்பார். மத சம்பந்தமான காரியங்களுக்கு மதிப்பளிப்பார். தத்துவவாதிகளையும், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிராக பேசும் பழமைவாதிகளையும் வெறுப்பார். அவர் ஆட்சிப்பகுதியில் அப்படி யாரும் பேசித் தீர்ப்பளிப்பதை அறிந்தால் கொன்றுவிட ஆணையிட்டார். இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தவறாமல் ஐந்து வேளை தொழுகையை கடைபிடித்தார். இமாம் வரத் தவறினால், அதற்கு ஈடான ஒருவரை முன்னிறுத்தி தொழுது கொள்வார். கடமை தொழுகைகளுடன் சேர்த்து கூறப்பட்டுள்ள முன்,பின் சுன்னத் வகை தொழுகைகளையும், இரவுத் தொழுகைகளையும் தொழுவார். அபு ஷமாஹ் என்பவர், ‘சுல்தான் உடல்நலம் இல்லாத போது கூட தொழுது கொண்டிருந்தார். கடைசி மூன்று நாட்கள் நினைவற்று போனதும் தான் தொழுகையை நிறுத்தினார். பயணங்களின் போது கூட நிறுத்தி தொழுது வந்தார்’ என்று கூறுகிறார்.
பூல் என்பவரின் அறிக்கைப் படி, ஸலாவுத்தீன் தன் குழந்தைகளிடமும், கவர்னர்களிடமும், நீதியுடனும், நேர்மையுடனும்,  மக்களை சரியான வழியிலும், அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தும் நடக்க வேண்டும் என்றும் கூறினார். ஒரு முறை தனது மகன் அஸ் ஸாஹிரை நோக்கி, ‘நான் உனக்கு அல்லாஹ் விடம் பயந்து கொள்வதற்கு சிபாரிசு செய்கிறேன், ஏனென்றால் அது தான் நல்ல செயல்களை திறப்பதற்கான சாவி. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிய உத்வேகப்படுத்துகிறேன், ஏனென்றால் அது ஒன்றுதான் மறுமைக்கான வழி. இரத்தம் சிந்தப்படாமல் இருப்பதற்கு எச்சரிக்கையாக இரு, எனென்றால் சிந்த ஆரம்பித்தால் நிறுத்துவது கடினம்’ எனக் கூறியதாக கூறுகிறது.
ஆம், இவைகள் நாம் ஏற்கனவே சிறு வயதில் ஆரம்பத்தில் பார்த்த அவரின் ஆசிரியர்களிடம் இஸ்லாமிய, அரசியல், போர்ப்பயிற்சி போன்ற வற்றைக்கற்று, தான் ஒரு சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியாக நேரிலும் கண்ட பாடங்கள். அர்த்தமுள்ள பாடங்கள். அதுதான் அவரின் குணமும், நடைமுறையுமாக இருந்தது. தன் இன மக்களாலாலேயே கொல்லப்பட வேண்டிய சதிகளிலிருந்து தப்பித்தார். ஒவ்வொரு பிரதேசமாக அலைந்து திரிந்து முஸ்லீம் ஆட்சியாளர்களை ஒன்றிணைத்தார். தன் பலம் கொண்ட மட்டும் எதிர்களை எதிர்த்தார். இதுவே அல்லாஹ் அவரை மோசமான சூழ்நிலைகளிலிருந்து விடுவிக்கவும், சோதனைகளிலிருந்து சுலபத்தில் வெளியேற்றவும் போதுமானதாக இருந்ததோ?
அல் கதி இப்னு ஷத்தாத், அவரிடம் எதிரிகள் முஸ்லீம்களை தோற்கடித்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட போது, தொழுது “ஓ அல்லாஹ்வே நான் உனது மார்க்கத்தை வென்றெடுப்பதில் இருந்து பொய்த்துப் போனேன். உனது உதவியுமின்றி போனேன். உனது கயிறுகளை வேகமாக பிடிப்பாய் யா அல்லாஹ், நீயே சிறந்த நம்பிகையாளன், உனது கருணையையே சார்ந்திருக்கிறேன் என்று கண்ணீர் மல்க வேண்டினார். அவர் தாடியும் நனைந்து தரைவிரிப்பும் ஈரமாகியது. இன்று முஸ்லீம்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று கூறப்பட்டது. இந்த முறை பிரார்த்தனை செய்பவர்களில் யாருடையதாவது நிறைவேறும் என்று அவர் வெள்ளிக்கிழமையிலும் போரிடச் சொன்னார்.. ஒரு வேளை அதற்கான பதில்தான் இந்தமுறை வெற்றியாக இருக்கலாம். தனக்கு முன் நேர்மையான வழியில் நடந்த கலீஃபாக்களின் சுவடுகளை தொடர்ந்தார். அவர்கள் எப்படி வீரர்களை அல்லாஹ்வுக்கு பயப்படும்படி கட்டளையிட்டார்களோ அதே முறையில் நடத்தினார். உதாரணத்திற்கு, பெர்ஷியாவை வெல்ல சென்ற ஸாத் இப்னு அபி வக்காஸுக்கு, உமர் இப்னு அல் கத்தாப் எழுதியதைப் போல.

ஸலாவுத்தீன் ஜெருசலத்தை வெல்ல தீவிரம் காட்டினார் என்று சரித்திர ஆசிரியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த தீவிரத்தில் அவர் மனைவி, குழந்தைகளை கூட பல நாட்கள் பிரிந்திருந்தார். அவர் இராணுவம், பொருளாதாரத்தில் காட்டிய அதே அக்கறையை மத விவகாரங்களிலும், ஒழுக்கத்திலும் காட்டினார் உதாரணத்திற்கு, ஒரு துறையை ஏற்படுத்தி இராணுவத்தினர் ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு இடம் பெயரவும், குதிரைகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடவும், ஆயுதங்களின் திறன், வீரர்களின் எண்ணிக்கை, உடைகள் போன்றவற்றை கண் காணிக்கச் செய்தார். ஆயுதத் தொழிற்சாலை, கப்பல் கட்டுதல், வெடி மருந்துகள் தயாரிப்பு, சுரங்க அமைப்பு போன்றவற்றையும் கவனித்தார். கப்பற்படையிலும் தீவிரம் காட்டினார். அதற்காக ஒரு தனி அமைப்பை துவங்கி நிர்வாகத்தை கவனித்தார். அதன் தலைமையாளர் ‘எமிர் ஆஃப் ஸீ’ என்று அழைக்கப்பட்டார்.
இதைப் போல் விஷயங்களில் ஆய்வும், முழு கவனம் செலுத்தியதாலேயே எதிரிகளை நம்பிக்கையுடனும், உண்மையுடனும் போரிட்டு இழந்த பகுதிகளை மீட்டி இஸ்லாத்துக்கு மதிப்பும், மரியாதையையும் கிடைக்கச் செய்தார்.
நாம் முன்னர் பார்த்த படி 567 A.H.ல் ஃபாத்திமிட் கலீஃபா இறந்த போது சுல்தான் ஸலாவுத்தீன் எகிப்தை ஆண்டு கொண்டிருந்தார். தெற்கு எகிப்து (நுபியா), ஏமன், ஹிஜாஸ் போன்ற பகுதிகளை வென்று தன் ஆளுமையை விரிவு படுத்தினார். செங்கடலை சுற்றி உள்ள பகுதிகள் அவரின் ஆட்சிக்கு கீழ் வந்தது. நூருத்தீன் இறப்புக்கு பின் சிரியாவில் ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்த போது டமாஸ்கஸ், அலிப்போ மற்றும் சில பகுதிகளை இணைத்துக் கொண்டார். அதனால் வட ஈராக், குர்திஸ்தான், அகன்ற சிரியா, ஏமன், எகிப்து, பர்காஹ் மற்றும் சில பகுதிகளை இணைத்து ஒருங்கிணைந்த பெரிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்கினார். சந்தேகமில்லாமல் இப்படியொரு கூட்டமைப்பே நூறாண்டுகளுக்கும் மேலாக எதிரிகளின் பிடியிலிருந்த ஜெருசலத்தை சுதந்திரம் பெற வைத்தது. உண்மையில், முஸ்லீம் நாடுகள் இஸ்லாத்தின் பேரில் இணைந்ததும், அரசியல் ரீதியாக நம்பிக்கை கொண்ட தலைவர்களும், அனுபவம் வாய்ந்த வீரர்களாலும், உண்மையான இளவரசர்களாலும் மட்டுமே இந்த மாபெரும் வெற்றி சாத்தியமானது.
ஸலாவுத்தீனின் சீரிய தலைமை மட்டுமே முஸ்லீம்கள் முன்னோக்கி தொழுகை நடத்தும் முதல் மசூதியான அல் அக்ஸா மசூதியையும். ஈஸா (ஏசு நாதர்) அலைஹி வஸ்ஸலாம் பிறந்த பூமியும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஹ்ராஜ் என்னும் பயணத்தின் போது இறங்கிய இடமும் ஆகிய ஜெருசலத்தை மீட்க வைத்தது.
அல் கதி இப்னு ஷத்தாத் தனது ‘அந் நவாதி அஸ் ஸுல்தானியா’ என்ற புத்தகத்தில், சுல்தான் அவர்கள் 584 A.H. துல்கதாஹ் மாதத்தில் சகோதரர் அல் மாலிக் அல் அதிலின் கீழ் செயல் பட்ட எகிப்து இராணுவத்தினருக்கு விடுமுறை அளித்தார். ஜெருசலத்தில் ஈத் தொழுகைக்குப் பிறகு, நாங்கள் சகோதரருடன் சென்று விடுமுறை செல்லும் வீரர்களைக் காண சென்றோம். திரும்பும் வழியில் கடற்கரை நகரங்களை கண் காணித்தவாறு வந்தார். அவருடன் பயணித்தவர்கள் அப்படிச் செயய வேண்டாம் என்றும், நமது எகிப்து வீரர்கள் விடுமுறையில் புறப்பட்டு விட்ட இந்த நேரத்தில் எதிரிகள் டயர் நகரில் தாக்கக்கூடும் என்று அறிவுறுத்தினர். இது மிகப் பெரிய அபாயம் என்றும் கூறினர். அவர் அதற்கு மதிப்பளிக்காமலும், பயப்படாமலும் கடற்கறை நகரமான அக்ரா சென்றோம். குளிர்காலமானதால் கடல் அலை மிக ஆக்ரோஷமாக இருந்தது நான் அந்த சூழ்நிலையை ரசித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, அவர் என்னைப் பார்த்து சொன்னார். “நான் உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு வேளை அல்லாஹ் எஞ்சியுள்ள இந்த கடற்கரை நகரங்களை வெற்றி கொள்ள உதவினால், பகுதிகளாக பிரித்து என் மகன்களிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து விட்டு, தங்களையும் அழைத்துக் கொண்டு அந்த சிலுவைப் போராளிகளையும், இறை நம்பிக்கை யற்றவர்களையும் எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைவேன்” என்றார். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நான் சொன்னேன், நீங்களோ, வீரர்களோ அதைப் போல் ஒரு ஆபத்தில் ஈடுபட முடியாது. ஏனென்றால், அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்றேன். அதற்கு அவர், “நான் சட்டபூர்வமான ஒன்று கேட்கிறேன். எந்த இரு மரணங்கள் மர்யாதையானது?” என்று கேட்டார். நான் சொன்னேன், அல்லாஹ்வுக்காக மரணிப்பது என்று. ஆம் எனது காரணமும் அல்லாஹ்வுக்காக மரணிப்பது தான் என்றார். என்ன ஒரு அற்புதமான காரணம். என்ன ஒரு சுயநலமான தைரியம். அப்படித்தான் வாழ்ந்தார். அனைத்துப் போர்களிலும் அவர் இறைவனின் உதவியைக் கோராமல் இருந்ததில்லை. மேலும், மேற்கத்திய, கிழக்கத்திய, இஸ்லாமிய மற்றும் அனைத்து சரித்திர ஆசிரியர்களின் பதிவின் படி வெற்றிக்குப் பிறகு, எதிரிகளிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டார். ஆனால் அதே நேரத்தில் இன்று யூதர்களால் பாலஸ்தீனில் நடத்தப்படும் மனிதாபமானமற்ற செயல்களாலும், படுகொலை களாலும் இந்த இருபதாம் நூற்றாண்டில் முஸ்லீம் உலகம் வெட்கி தலைகுனிந்து கிடக்கிறது.
பாகம் : 25
இன்றைய முஸ்லீம் ஆட்சியாளர்களிடம் ஒற்றுமை இல்லை. ஒருங்கிணைந்தோ, தனியாகவோ போர்களில் வெற்றி பெற முடியவில்லை. ஏனோ திருக்குர்ஆன் சொல்லும் முறையில் ஜிஹாத் வழியில் அல்லாஹ்வுக்காக போர் செய்வதில்லை. அவர்கள் இணைவைப்பாளர்களான அமெரிக்க, ஐரோப்பிய, ரஷ்ய நாடுகளின் ஆதரவாளர்களாக இடது சார்பு, வலது சார்பு, ஜனநாயகம் என்று போதிக்கப்பட்டு தரம் தாழ்ந்திருக்கின்றனர். 1948 ல் கூட யூதர்கள் 200 பேர் அடங்கிய ஒரு குறிப்பிட்ட முஸ்லீம் சகோதரப் படையால் பலமாக, தைரியமாக, அற்புதம் நிகழ்த்திய வண்ணம் தடுக்கப்பட்ட போது, கைது செய்யப்பட்ட முஜாஹித்தீன் மாரூஃப் அல் குதிரி என்பவர் யூதர்களிடம் சொன்னார். “நீங்கள் வெகு தூரத்தில் இருந்து இங்கு வந்து தங்குவதற்காக போர் செய்கிறீர்கள். நாங்கள் அல்லாஹ்வுக்காக இறப்பதற்கு போர் செய்கிறோம்” என்றார். ஒரு குழுவின் தலைவனிடம் இருந்த ஜிஹாத் கொள்கை ஏனோ இன்று மிகப்பெரிய இராணுவ பலத்துடன் நாடாளும் முஸ்லீம் ஆட்சியாளர்களிடம் இல்லை. 1973 ல் கூட அமெரிக்காவால் அறியப்பட்ட யோம் கிப்புர் போரில் நம்பிக்கை கொண்ட சிரிய தளபதிகளாலும், முஸ்லீம் வீரர்களாலும் அல்லாஹ் வின் பேரில் உறுதி பூண்டு நடத்திய போரில் வென்றார்கள். எதிரிகளுக்கு சேதத்தை உண்டு பண்ணினார்கள். அன்றைக்கு ஸலாவுத்தீனால் ஹத்தீனில் பாலஸ்தீனத்தை வெற்றிகொள்ள நடத்திய போர் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் பெயரில் இஸ்லாத்துக்காக நடந்தது. அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியைத் தந்தான். இன்றைக்கு அதே பாலஸ்தீனுக்காக தோல்விக்கு மேல் தோல்வியாக அடைந்து நடத்தும் போர்கள் அரபிகளுக்காகவும், அரபு தேசங்களுக்காகவும் சுயநலமாக நடத்தப்படுகின்றன. பாலஸ்தீனியர்களுக்கு சுதந்திரம் வழங்கும் சாக்கில் யூதர்களை சூழ்ச்சிகரமாக பாலஸ்தீனில் பிரிட்டன் நுழைத்து விட்டுச் சென்று விட்டது.  இழந்த முஸ்லீம் தேசத்தை யூதர்களிடமிருந்து மீட்க கிறிஸ்தவ அமெரிக்காவும், ஐரோப்பாவும் மத்தியஸ்தர்களா? அட சுயநலமிக்க மூட முஸ்லீம் ஆட்சியாளர்களே. அதுவும் யாரிடம் தோற்கிறார்கள். சரித்திரத்தில் மிகவும் இழிவுபடுத்தப் பட்டவர்களிடம், அல்லாஹ் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றி விட்டவர்களிடம், முன்னர் சரித்திரமெங்கும் துரோகத்திற்கும், கோழைத்தனத்திற்கும், நன்றி கெட்டவர்களாக மட்டுமே இருந்த ஒரு கூட்டத்தினருடன். ஆம் வெட்கம்.
பாலஸ்தீன விவகாரம் நாளுக்கு நாள் மோசமாகிப் போய் கொண்டிருக்கிறது. ஒவ்வோரு நாளும் இஸ்ரேல் தன் பலத்தையும், நிலப்பரப்பையும்  விரிவாக்கிக் கொண்டு போகிறது. தற்போதைய இஸ்லாமிய நாட்டு ஆட்சியாளர்களை உலகின் மிகச் சிறந்த முட்டாள்களாக ஆக்கி எதிரிகள் வெற்றி பெற்று கொண்டிருக்கின்றார்கள். அரபு ஆட்சியாளர்களுக்கு தாத்தா, தந்தை, மகன் என்று வரிசையாக ஆளவேண்டும். ஓ.. இஸ்லாமிய தேசங்களே! உலகின் ஒப்பற்ற மார்கத்தை கடை பிடிப்பவர்களே உண்மையில் உங்களுக்கு குர்ஆன் கூறும் ஜிஹாதின் பேரில் நம்பிக்கையில்லையா? எப்போது நீங்கள் விபசாரத்தையும், நடன அரங்குகளையும், மதுபான விடுதிகளையும் அடைத்து விட்டு, கீழ்த்தரமான பாடல்கள், கவர்ச்சி நடனங்கள், வெட்கங்கெட்ட நாடகங்கள் ஒளி பரப்பும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டு, உங்கள் நாட்டு இளைஞர்களுக்கு மறந்து போன சரித்திரத்தை நினைவூட்டி ஜிஹாதின் பால் எதிர்களை விரட்டப் போகிறீர்கள்.
முஸ்லீம் நாடுகள்,
1946 ல் போரிட்ட போது அழைப்பு விடுத்தார்கள் தேசத்திற்காக.
1956 ல் போரிட்ட போது அழைப்பு விடுத்தார்கள் தேசத்திற்காக.
1967 ல் போரிட்ட போது அழைப்பு விடுத்தார்கள் புரட்சிகரமான நடைமுறைகளுக்காக.
1973 ல் போரிட்ட போது அழைப்பு விடுத்தார்கள் சவாலுக்காகவும், மதிப்புக்காகவும், மரியாதைக்காகவும்.
போர் என்றாலே ஜிஹாத் வழியில் அல்லாஹ்வுக்காக என்று குர்ஆன் கூறும் முறையில் அழைக்க ஏன் மறந்தீர்கள்?
பாலஸ்தீன் இந்த நம்பிக்கையற்ற நாஸ்திகவாதிகளால் விடுதலை அடையாது.
பாலஸ்தீன் இந்த மத நம்பிக்கையற்ற மறுப்பாளர்களால் விடுதலை அடையாது.
பாலஸ்தீன் இந்த அற்பத்தனமான குற்றவாளிகளால் விடுதலை அடையாது.
யார் பாலஸ்தீனத்தை விடுதலை செய்வதற்காக யூதர்களைக் கொல்கிறார்களோ அவர்கள் ஜோர்தானியர்களோ, சிரியர்களோ, பாலஸ்தீனியர்க்ளோ, அரபுகளோ அல்ல. அவர்கள் முஸ்லீம்கள் என்று தான் அழைக்கப்படுவார்கள். யூதர்களுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம் தேசத்திற்காகவும், அரபுகளுக்காகவும் என்று சொன்னால், அது இஸ்லாத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகும். ஏனென்றால், அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவத்தை அரபுச் சகோதரத்துவமாக ஆக்குகின்றனர்.
ஸலாவுத்தீனின் குணாதிசயம்
சந்தேகமில்லாமல் ஸலாவுத்தீன் தொழுகையிலும், இறை அச்சம் உள்ளவராகவும் இருந்தார். அதுவே அவர் ஒரு சிறந்த முஸ்லீமாக இருந்ததற்கு காரணமாய் இருந்தது. ஜகாத் கொடுக் காமல் இருந்ததில்லை. ஏழைகளுக்கு பெருவாரியாக அள்ளி வழங்கினார். சில நாட்கள் தவறவிட்ட ரமலான் மாத நோன்பை தான் இறப்பெய்திய வருடம் ஜெருசலத்தில் நிறைவேற்றினார். அதற்காக டாக்டர்கள் எச்சரித்த போது, இதனால் தனக்கு விதிக்கபட்டதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்றார். தான் இறந்து போன அந்த வருடம் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால், நேரமும், பொருள் வசதியும் (ஆம் இந்த சக்கரவர்த்தியின் உண்மையான பொருளாதாரம் வசதியற்றுதான் இருந்தது), உடல்நலமும் ஒத்துழைக்காததால் அடுத்த வருடம் நிறைவேற்றலாம் என்று இருந்தார். ஆனால் இறப்பு முந்தி விட்டது. நீதியும், நேர்மையும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். உமர் அல் கல்லதி என்ற வியாபாரி, ஸலாவுத்தீன் அவர்கள் சுன்குர் என்ற தனது அடிமை ஒருவனை அபகரித்துக் கொண்டதாக வழக்கு தொடர்ந்தான். ஸலாவுத்தீன் பொறுமையாக வழக்கை எதிர் கொண்டு தான் நிரபராதி என்று நிரூபித்தார். இறுதியில் அந்த வியாபாரியை மன்னித்து பரிசும் கொடுத்தார். இவருக்கு முன் ஆண்ட  ஃபாத்தி மிட்கள் பல விதங்களில் வரி வசூலித்தனர். வரி செலுத்தாத வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தனர். அந்த வரி களை எல்லாம் ஸலாவுத்தீன் தனது ஆட்சியில் நீக்கினார்.
ஸலாவுத்தீன் கட்டிட கலைகளிலும் ஆர்வம் காட்டினார். கெய்ரோவின் பிரம்மாண்டமான சுவர் இடிந்து சுலபமாக நகருக்கு உள்ளேயும், வெளியேயும் சென்று வரக்கூடிய அளவுக்கு இருந்தது. அத் தவஷி பஹா அத்தீன் கரகுஸ் என்பவரின் தலைமையில் 29.302 கி. மீ. பரப்பளவில் மொத்த கெய்ரோவையும் உள்ளடக்கிய வண்ணம் கட்டினார். எதிரிகளிடமிருந்து பாதுகாக்க கல அத் அல் ஜபல் (மலை அரண்மனை) என்ற அரண்மனையை கட்டினார். தொடர்ந்து போரில் ஈடுபட்டிருந்ததால் முழு பணியும் முடிக்கவில்லை. இது எகிப்திய கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக இருந்தது. சினாய் பகுதியில் சூயஸ் நகரின் வடகிழக்கில் 57 கி. மீ. தொலைவில் கலா அத் சினா என்ற அரண்மனையைக் கட்டினார். கிஸா, அர் ருதாஹ் தீவுகளை நைல் நதியின் ஆழ, அகலத்திற்கு ஏற்ப அமைத்தார். கெய்ரோவில் புகழ் பெற்ற மர்ஸ்தான் மருத்துவமனையைக் கட்டினார்.
பாகம் : 26
எகிப்து நகரம் அவருக்கு முக்கியமாக கடற்படை தளமாக இருந்தது. அலெக்ஸாண்டிரியா, டமெய்டா முக்கிய துறைமுகமாக இருந்தது. நைல் நதியின் துறைமுகமாக அல் ஃபுஸ்தத், குஸ் போன்றவை போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு எந்நேரமும் தாக்குதலுக்கு தயாராய் இருந்தன.
கல்வித்துறையிலும் ஆர்வமாய் இருந்தார். சிறு பிள்ளைகளுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு குர்ஆன் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். ஆரம்ப கல்வி முடித்த இளைஞர்களை அடுத்துள்ள நாடுகளில் உயர் கல்வி கற்க உதவி செய்தார். இவர் காலத்தில் கெய்ரோவில் அம்ர் இப்னு அல் அஸ், அல் அஸர், அல் அக்மார், அல் ஹகிம் பியம்ரில்லாஹ், அல் ஹுஸ்ஸைன் மசூதிகளும், அலெக்ஸாண்டிரியாவில் அல் அத்தரின் மசூதியும் கட்டப்பட்டன. டமாஸ்கஸ் நகரம் உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் மத போதனையாளர்களுக்கும், பயில்பவருக்கும் பாலமாக இருந்தது. எகிப்திலும், திரிபோலியிலும் அமைந்த தார் அல் ஹிக்மா எண்ணற்ற மாணவர்களைக் கொண்டதாக இருந்தது. ஸலாவுத்தீன் ஹனஃபி (இமாம் பிரிவு) மத மத்ஹப்பின் வழியில் மத கல்வி போதனைகளை அஸ் ஸியுஃபியாஹ் பள்ளியில் பயிற்றுவிக்க வேண்டினார். அதற்காக 32 நிறுவனங்களின் மூலமாக வருமானம் வரச் செய்தார். அதே போல் தான் பின்பற்றிய ஷாஃபி (இமாம் பிரிவு) மத மத்ஹப் பள்ளிகளையும் நிர்மாணித்தார், அதற்கும் வருமானத்திற்கு வழி செய்தார். அவரின் ஆட்சியில் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. வருமானத்தை ஜிஹாத், கட்டிடங்கள் நிர்மாணம், கோட்டைகள், அரண்மனைகள், அணைக்கட்டுகள், கல்வி என்று பல துறைகளில் முன்னேற்றத்திற்கு செலவிட்டார். விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கினார். வணிகத்தில் கவனம் செலுத்தி எகிப்தை கிழக்கும், மேற்கும் இணைக்கச் செய்தார். வெனிஸ், பிசா போன்ற பல ஐரோப்பிய நகரங்களை வியாபார ரீதியாக எகிப்தின் முக்கிய நகரங்களுடன் தொடர்பு கொள்ள செய்தார். வெனிஸ் வியாபாரிகள் அலெக்ஸாண்டிரியாவில் அமைத்த அல் ஐக் மார்கட் என்ற வணிக வளாகம் மிகவும் புகழ் பெற்றது. திரிபோலியில் காகித தொழிற்சாலை அமைத்தது ஸலாவுத் தீனின் சாதனை. பின்னர் சிலுவைப் போராளிகள் இதை ஐரோப்பாவுக்கு மாற்றிக்கொண்டனர். முதல் காகித தொழிற்சாலை பெல்ஜியத்தில் 1189 C.E. ல் நிறுவப்பட்டது. அதுவரை இங்கிலாந்தில் 16 ம் நூற்றாண்டு வரை காகிதத் தொழிற்சாலை வரவில்லை.
அல் இமாத் அல் அஸ்ஃபஹானி என்பவர், ஸுல்தான் எப்போதுமே கவுரவமான உடையையே அணிவார். அதுவும் பருத்தி, கம்பளியிலான உடையாகவே இருக்கும். அவர் யாருடனாவது இருக்கும் போது, தான் ஒரு சுல்தானாகவே நினைக்க மாட்டார் என்கிறார். விளையாட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார். (D)ஸுஹ்ர் என்னும் தொழுகையிலிருந்து அஸ்ர் என்னும் தொழுகை வரை வீரர்களை போலோ என்னும் விளையாட்டை ஆடவிட்டு கண்டு களிப்பார். இஸ்லாத்திற்கு புறம்பான விஷயங்களை தடை செய்தார். முஹர்ரம் 10 அஷுரா நாளில் மக்கள் வேலைகளை புறக்கணித்து, வியாபார நிறுவனங்களை மூடிவிட்டு அழுது புரண்டு துக்க நாளாக கொண்டாடுவதை தடை செய்தார். மக்காவின் இளவரசர் மக்காவிற்கு புனித பயணம் வருபவர்கள் ஜித்தா நகரில் நுழையும் முன், வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் வைத்தி ருந்தார். ஸலாவுத்தீன் அந்த வரியை நீக்கி அதற்கு ஈடாக இளவரசருக்கு எட்டாயிரம் அர்திப் கள்    (ஒரு அர்திப்= 84 கிலோ) கோதுமையை செலுத்தினார். அது மக்க நகர் மக்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாய் இருந்தது.        
ஸலாவுத்தீனுக்கு சமாதானமாக போகும் பழக்கமில்லை. இதற்கு சரித்திர ஆதாரம் இருக்கிறது. சில சமயம் அவரின் வீரர்களின் சலிப்பினாலும், அவரின் உத்தரவை செயல் படுத்தும் தயக்கத்தினாலும் சமாதான ஒப்பந்தங்களுக்கு ஒப்புக் கொண்டார். ஸலாவுத்தீன் அல்லாஹ்வின் அழைப்பிற்கேற்ப மக்களை ஜிஹாத்தின் பால் அழைத்து பாலஸ்தீனையும், சிரியாவையும் சுத்தப்படுத்த எண்ணினார். அந் நகரங்களை எதிரிகள் ஆளும் போது லஞ்சத்தினாலும், ஒழுக்கமற்ற வகையிலும் கெடுத்து வைத்திருந்தனர். மீண்டும் எதிரிகள் ஒன்று கூடி வந்து முஸ்லீம்களை தாக்குவார்களோ என்று அஞ்சினார்.
அல் கதி இப்னு ஷத்தாத் எழுதிய ‘அந் நவாதிர் அஸ் ஸுல்தா னியா’ என்ற புத்தகத்தில் விலாவாரியாக சொல்லி இருக்கிறார். தான் ஒப்பந்தங்களுக்கு என்றுமே விரும்பியதில்லை என்றும், என்றைக்கும் அவர்கள் திரும்பி வந்து போர் தொடுத்து அவர்களின் நகரங்களை கைப்பற்ற நினைப்பார்கள். ஐரோப்பியர்கள் ஆளுக்கொரு நகரத்தை பிரித்து ஆள்வார்கள். என்று ஸலாவுத்தீன் கூறியதாக கூறுகிறார்.
எப்படியாயினும் பல இழப்புகளை ஏற்படுத்திய பிறகு இரு தரப்பும் ரம்லாஹ் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டனர். இது இரு தரப்புக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தவில்லை. ஒப்பந்தமான தினத்தை நினைவு நாளாக கொண்டாடினர். இருவரும் அவர்கள் கலாச்சார முன்னேற்றத்திற்கும், கட்டிடங்களை சீரமைக்கவும் நெடுநாட்கள் எடுத்துக் கொண்டனர். யார் வேண்டுமானாலும் இங்கிருந்து அங்கேயும், அங்கிருந்து இங்கேயும் வரலாம். ஒப்பந்தத்திற்கு பிறகு அமைதியும், வியாபாரமும், பொருளாதார சீர்திருத்தமும் தொடர்ந்தது. முஸ்லீம்கள் யஃப்ஃபா சென்று உணவுப்பொருள் களுக்கும், வியாபாரத்திற்கும் ஆன வழியை தேடினார்கள். பாலஸ்தீனில் நிலைமை சுமூகமாகி மக்கள் நிலையான தன்மையும், பாதுகாப்பும் பெற்றவர்களாக மகிழ்ச்சி அடைந்தனர்.
சுல்தான் ஸலாவுத்தீன் ஜெருசலத்தில் கிறிஸ்தவர்கள் வந்து போவதற்கு வசதியாக எல்லை கதவுகளை திறந்து வைத்தார். பெருவாரியான கிறிஸ்தவர்களின் போக்குவரத்தால், ஆங்கில மன்னன் ஸலாவுத்தீன் அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு செய்வாரோ என்று பயந்தார். அதனால், ஸலாவுத்தீனை யாத்திரி கர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளச் செய்தார். ஆனால் ஸலாவுத்தீன் அவரின் கோரிக்கையை மறுத்து வெகு தொலைவிலிருந்து வரும் யாத்திரிகர்களை ஒப்பந்தப்படி தடுக்க தன்னால் முடியாது என்று மறுத்து விட்டார். மேலும், கிறிஸ்தவ யாத்திரிகர்களுக்கு உணவு அளித்து அவர்களுடன் நல்லுறவுடன் பேசினார். இது மேற்கத்திய, கிழக்கத்திய ஐரோப்பிய மன்னர் களுக்கு சகிப்புத்தன்மைக்கும், மன்னிப்பை நாடுவோரும், நல்லுறவை விரும்புவோரும் தரும் பாடம் என்றும், இதுவே இஸ்லாமியர்களின் சிறந்த பண்பு என்பதையும் புரிய வைக்கும் என்று நினைத்தார்.  இது ஆங்கில மன்னன் இங்கிலாந்து திரும்பு வதற்கு முன்பு நடந்தது.
ஸலாவுத்தீன் ரம்லாஹ் ஒப்பந்தத்திற்கு பிறகு, ஜெருசலம் வந்து அதன் தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்ந்தார். அங்கு மறுசீரமைப்பாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனை களையும், சிதறிப் போன நிர்வாகத்தையும் சரி செய்தார். அவர் ஹஜ் புனித பயணம் போக விரும்பினார். ஆனால், இளவரசர்கள் வேண்டாம் என்றும் எதிர்களால் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என ஆலோசனை கூறினர். அதை அவர் ஏற்றுக் கொண்டார். கடற்கரை நகரங்களுக்கு பயணித்து எதிரிகளால் சேதமடைந்த அரண்மனைகளையும், கோட்டைகளையும் பார்வையிட்டார். ஜெருசலத்திலிருந்து நப்லுஸ், பைசன், டைபிரிஸ், பெய்ரூட், டமாஸ்கஸ் வரை சென்றார். ஒவ்வொரு இடத்திலும் அந்த மாவீரரை மக்கள் தங்கள் வியாபாரம். வேலைகளை மறந்து வீதியெங்கும் திரளாக வரவேற்றனர். அது பயத்திற்காக அல்ல, தங்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி, நீதியை பரவச்செய்து, நல்ல வாழ்க்கை முறையை எற்படுத்தி கொடுத்த உன்னதமான தலைவனுக்காக. டமாஸ்கஸில் மறுசீரமைப்பை தொடங்கி, தேவையானவர் களுக்கு வசதி செய்து கொடுத்தும், படைவீரர்களுக்கு சொந்த ஊர் செல்ல விடுப்பு கொடுத்தும், மக்களின் குறைகளை அறிந்து நிவர்த்தியும் செய்தார். என்றைக்குமே டமாஸ்கஸ் அவருக்கு பிடித்த நகரமாக இருந்தது. அங்குதான் தன் சகோதரர் அல் அதிலுடனும், அவரின் குழந்தைகளுடனும் வேட்டையாட பழகிக் கொண்டார். நீண்ட நாட்களாக போரினால் நீடித்த இரவுகளையும், களைப்பையும், ஆயாசத்தையும் போக்கி புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டார். இப்னு ஷத்தாத்,” ஸலாவுத்தீனின் டமாஸ்கஸின் மகிழ்ச்சி அவருக்கு எகிப்து திரும்பும் எண்ணத்தையே மறக்கடிக்க செய்து விட்டது” என்று சொல்கிறார். தன்னை தன்னுடன் தங்குவதற்கு ஸலாவுத்தீன் டமாஸ்கஸ் அழைத்தார் என்றும் தன்னைக் கண்டவுடன் தழுவி கண்ணீர் விட்டார் என்றும் கூறுகிறார்.
பாகம் : 27
மக்கா புனித பயணம் முடித்து திரும்பும் யாத்திரிகர்களை வரவேற்க சென்றார். தன்னால் முடியுமென்று அவர்களை நோக்கி நகர முற்பட்டார். ஆனால், அவரால் முடியவில்லை. அங்கிருந்து திரும்பியவுடன் அவரை மஞ்சள் ஜுரம் தாக்கியிருந்தது. மருத்துவர்கள் அவரை குணமாக்க சிகிச்சை கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே நோய் தீவிரமடைந்தது. மக்களுக்கு அவரின் நோய் அறிவிக்கப்பட்ட போது, கவலை யுடன், பயமும் அடைந்தார்கள். மக்கள் பெரும் கூட்டமாக எந்நேரமும் டமாஸ்கஸின் அரண்மனை முன் கூடி அவர் உடல்நலத்தை விசாரித்த வண்ணம் இருந்தனர். சிலர் இறைவனிடம் பிரார்த்தித்தனர். அல் கதி இப்னு ஷத்தாத், அல் கதி அல் ஃபத்ல் மட்டும் ஸலாவுத்தீனிடம் அனுமதிக்கப் பட்டனர்.
ஆறாம் நாள் பணியாட்கள் ஷத்தாத் மூலம் சுல்தானுக்கு மருத்துக்கு பிறகு குடிக்க குளிர்ந்த தண்ணீர் கொடுத்தார்கள். அவர் அது சூடாக இருப்பதாக கூறினார். பின்னர் வேறு ஒரு தண்ணீர் கொடுத்தனர். இப்போது குளிர்ந்ததாக இருப்பதாக கூறி, ”இறைவனை மெச்சுகிறேன் யாரும் நீரை மாற்ற வில்லை.” என்று கோபப்படாமல் கூறினார். தானும் அல் ஃபத்லும் அறையை விட்டு வெளியே வந்து அழுததாக கூறுகிறார். அல் ஃபத்ல், “நாங்கள் அவரைப்போல் உயர்ந்த குணம் உள்ளவரை கண்டதில்லை, அந்த இடத்தில் வேறு ஒரு மன்னன் இருந்திருந்தால் நீர் வழங்கிய பாத்திரத்தை பணியாள் மீது வீசி இருப்பான்” என்று கூறுகிறார்.
பத்தாம் நாள், ஊசி மூலம் இரண்டு முறை மருந்து செலுத்திய பிறகு, சிறிது முன்னேற்றமடைந்து கொஞ்சம் பார்லி நீர் அருந்தினார். மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். அவர் கால்களில் வியர்வை வர ஆரம்பித்தது என்று கேள்விப்பட்டு நாங்கள் அல்லாஹ்வுக்கு மிகுந்த நன்றி கூறினோம். பதினோராம் நாள் அவரின் வியர்வை அதிகமாகி படுக்கையை நனைத்து தரை மற்றும் விரிப்புகளில் வழிந்தது. மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
ஸலாவுத்தீனின் மூத்த மகன் அல் மாலிக் அல் அஃப்தல் நூருத்தீன் அலி, மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தன் தந்தை அதிலிருந்து குணமாகப் போவதில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டார். அவர் மக்கள் முன்னிலையில், தன் தந்தை எவ்வளவு காலம் உயிரோடு இருக்கிறாரோ அதுவரை அவரே மன்னராக இருப்பாரென்றும், அதன் பிறகு, தான் மன்னராக பொறுப்பேற்பதாகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இது பற்றி அல் கதி இப்னு ஷத்தாத் “ அந் நவாதிர் அஸ் ஸுல்தானியா” என்ற நூலில் குறிப்பிடுவதாவது: உண்மையில் கூறுவதென்றால், நான் மன்னருக்கு மிகவும் விசுவாசமாக இருந்தேன். நாட்டைக் காக்க என் பொருளாதாரத்தையும், நேரத்தையும் செலவிட்டேன். என் வாளும், வீரர்களும் அவரின் உத்தரவுக்காக காத்திருந்தனர். அல்லாஹ்வின் நாட்டப்படி அதைப் போலவே இனிமேலும் அவரின் மகன் அல் அஃப்தல் நூருத்தீன் அலி அவர்களின் தலைமையின் பின்னால் தொடர்வேன். எனது உள்நோக்கமும், வெளிநோக்கமும் ஒன்றே. இதற்கு அல்லாஹ்வே சாட்சி.
அவர் நோய்வாய் பட்ட பனிரண்டாம் நாள் இரவு மேலும் உடல் நலம் சீர் கெட்டு கோமா என்னும் நினைவு இழக்கும் நிலைக்கு சென்றார். திருக்குர்ஆன் ஓதக்கூடியவரை அழைத்து வந்து ஓதச் செய்தனர். ஓதக்கூடியவர், “அல்லாஹ்வை தவிர நம்பிக்கையான இறைவன் வேறு இல்லை”. எனும் வரிகளை ஓத கோமா நிலையிலிருந்த ஸலாவுத்தீன் அவர்களின் முகம் பிரகாசமானது. 589 A.H.ல் 27 சபர் மாதத்தில் ஃபஜர் (முஸ்லீம்களின் அதிகாலை தொழுகை)தொழுகைக்குப் பின் அவரின் உயிர் படைத்தவனிடம் திரும்பி சென்று விட்டது.
ஸலாவுத்தீனின் மரணம் உலக முஸ்லீம் சமுதாயத்திற்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. முஸ்லீம்களின் வருத்தத்தை ஷத்தாத், அந்த நாள் வருத்தத்தின் நாளாக இருந்தது. தங்களை நேர்வழி யில் ஆட்சி செய்த கலீஃபாவை இழந்த சோகத்தில் இருந்தனர். துக்கமும், இருளும், அரண்மனையிலும், நாட்டிலும், உலகம் முழுவதும் பரவி இருந்தது. அல்லாஹ்வின் சாட்சியாக, சிலர் தங்கள் உயிரையே அவருக்காக தியாகம் செய்ய தயாராய் இருந்தனர். நான் இதற்கு முன் அதைப் போல் கேள்விப்பட்டதில்லை. ஒரு அப்படி ஒரு அனுமதி இருந்தால் அவர் காப்பாற்றபட்டிருப்பார். அவரின் மகன்கள் இளவரசர்கள் என்றும் பாராமல் தெருவில் சென்று அழுதனர். மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரின் உடல் அஸ்ர் (மாலை சூரியன் சாயத்தொடங்குவதற்கு ஆரம்பிக்கும் நேரம்) தொழுகைக்கு முன் அடக்கம் செய்யப் பட்டது. மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த அவர் மகன் அல் மாலிக் அஸ் ஸாஃபிரை சில மனிதர்கள் சமாதானப் படுத்தினார்கள். அல் கதி அல் ஃபத்லால் கொண்டு வரப்பட்டு துணியால் மூடப்பட்ட சுல்தானின் உடல் ஊர்வலமாக சென்ற போது, ஊரெங்கும் அமைதி அமைதி அப்படியொரு அமைதி. அவரை டமாஸ்கஸின் அரண்மனையிலேயே அடக்கம் செய்தனர். மூன்று வருடங்கள் கழித்து அவர் மகன் அல் மாலிக் அல் ஃபத்ல் அவர்கள் நல்லவர் ஒருவருக்கு சொந்தமான அல் உமவை மசூதியை அடுத்துள்ள ஒரு இடத்தை வாங்கி முஹர்ரம் மாதம் அஷூரா என்னும் 10ம் நாளில் சமாதி எழுப்பி உடலை மாற்றி அடக்கம் செய்தார். அல் உமவை மசூதியில் மூன்று நாட்கள் மக்களும், அதிகாரிகளும் கூடி துக்கம் அனுஷ்டித்தனர் என்று கூறுகிறார்.
முஸ்லீம் தேசங்கள் மாபெரும் சரித்திர நாயகனை இழந்து விட்டது. அவருக்கு இறக்கும் போது 57 வயது ஆகி இருந்தது. நம்புங்கள் (வரைபடம் எடுத்து பாருங்கள்) இன்றைய ஆப்கானிஸ்தானை அடுத்து, திரிபோலி வரை எல்லை பரப்பிய சாம்ராஜ்ஜிய மன்னனுக்கு சொந்தமாக ஒரு நிலமில்லை, தோட்டமில்லை, பண்ணை இல்லை. அவருக்கு ஒரே ஒரு எஸ்டேட் சொத்து ஐம்பத்து ஏழு திர்ஹம் ஒரு தினார் மதிப்பிலான அளவில் சொந்தமாக இருந்தது. சர்வகாலமும் சிலுவைப் போராளிகளை எதிர்த்துக் கொண்டும், எதிரிகளுடன் துரோகம் செய்து காட்டிக் கொடுத்துக் கொண்டிருத்த முஸ்லீம்களை சமாளித்துக் கொண்டும் ஒரு சாம்ராஜ்ய சக்கரவர்த்தி உலகில் இருந்தார் என்றால் ஸலாவுத்தீன் அவர்கள் ஒருவர் தான். கலீஃபாக்கள் ஆட்சிக்கு பிறகு, மக்களை வெளிப்படையாக ஜிஹாத் வழியில் போரிட அழைத்த ஒரே முஸ்லீம் மன்னர் ஸலாவுத்தீன் தான். ஆம் அடக்கமாய் சொன்னாலும் ஆர்ப்பாட்டமாய் சொன்னாலும் இஸ்லாமிய உலகில் தனித்தன்மையுடன் கலிஃபாக்களுக்குப் பிறகு விளங்கும் மாமன்னர் சுல்தான் ஸலாவுத்தீன் ஒருவர்தான். உலகில் மிகவும் குரூர எண்ணமும், தீய குணங்களும் கொண்டவர்களை நேருக்கு நேர் நின்று போரில் வென்ற ஒரே மன்னர் ஸலாவுத்தீன் தான்.  யூதர்களை கூட சிறை பிடித்து அவர்கள் இயலாத நிலையில் தான் ஹிட்லர் கொத்துக் கொத்தாகத் தான் கொலை செய்தான். வெற்றி பெற்று தந்த இஸ்லாமியர்கள் கூட ஸலாவுத்தீன் அவர்களை மறந்து விட்டார்கள். ஆனால் அவரிடம் தோல்விப் பாடம் பயின்ற ஐரோப்பியர்கள் இன்றளவும் நினைவு வைத்திருக்கிறார்கள்.
இந்த வரலாற்றுக்காக கையாளப்பட்ட புத்தகங்கள் வருமாறு :
·       அல் கமில் ஃபீ அத் தரிக்
·       வஃபாயத் அல் அயான்
·       ரிஹ்லத் இப்ன் ஜுபைர்
·       கிதாப் அர் ரவ்ததைன் ஃபீ அக்பர் அத் தௌலதைன்
·       அந் நவாதிர் அஸ் ஸுல்தானியாஹ்
·       அல் மஹசின் அல் யூசுஃபியாஹ்
·       அந் நுஜும் அஸ் ஸஹிராஹ் ஃபீ முலுக்
·       மிஸ்ர் வ அல் கஹிராஹ்
·       முஜம் அல் புல்தான்
·       அஸ் ஸுலுக் லி மரிஃபத் திவால் அல் முலுக்
·       அர் ரமதி
·       ஸலாஹ் அத் தீன் அல் அய்யூபி
·       ஹயாத் ஸலாஹ் அத் தின்
·       ஸலாஹ் அத் தின் பைன ஷுரா
·       அஸ்ரிஹி வ குத்தபிஹ்
·       அந் நஸிர் ஸலாஹ் அத் தின்
·       அய்யாம் ஸலாஹ் அத் தின்
·       அல் ஹுருப் அஸ் ஸலிபியாஹ் ஃபீ அல் மஸ்ரிக் வ அல் மக்ரிப்
·       தாரிக் அல் இஸ்லாம் அஸ் ஸியாஸி
·       மவாகிஃப் ஹசிமாஹ் ஃபீ தாரிக் அல் இஸ்லாம்
·       அத் த அஸுப் வ அத் தஸமுஹ் பைன அல் மஸிஹியாஹ் வ அல் இஸ்லாம்
·       அல் இமான் தரிக்னா இலா அந் நஸ்ர்
·       தர்ஸ் அந் நக்பாஹ் அத் தானியாஹ்
தவா இலா அல் இஸ்லாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக