செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 11


ஓட்டோமான் பேரரசின் தொடர் பால்கன் போரினால் ஐரோப்பாவும், வட ஆப்பிரி க்காவும் மிகவும் சிரமப்பட்டன. ஆனாலும் 28 மில்லியன் மக்கள்தொகை பேரரசில் இருந்தது. இவற்றில் 17 மில்லியன் நவீன துருக்கியிலும், 3 மில்லியன் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனத்திலும், 2.5 மில்லியன் ஈராக்கிலும் இருந்தார்கள். இதல்லாமல் இன்னும் 5.5 மில்லியன் மக்கள் பெயரளவில் ஓட்டோமான் பேரரசினாலான அரபிய தீபகற்பத்தில் இருந்தார்கள். சமூக ஆதாயம் பெறவேண்டி ஆஸ் ட்ரியா-ஹங்கேரியுடன் போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா அலுவல் ரீதியாக இணைக்கப்பட்டது. இதனால் பேரரசு ஆஸ்ட்ரியாவுடனான போரைத் தவிர்ப்பதற்கு நோவிபஸரில் நிறுத்தியிருந்த படைகளை திரும்ப அழைத்துக்கொண்டது. 1911-12 ல் இத்தாலி-துருக்கிப்போரில் ஓட்டோமான் பேரரசு லிபியாவை இழந்தது. பால்கன் போரில் பேரரசு கிழக்கு த்ரேஸ் நகரத்தையும், சரித்திரப்புகழ் வாய்ந்த ஓட்டோமானின் அட்ரியநோபிள் நகரத்தையும் தவிர அனைத்து பால்கன் பகுதிகளையும் இழந்தது. ஓட்டோமான் இராணுவம் பின் வாங்கிவிட்டதால் ஏறக்குறைய 400,000 முஸ்லீம்கள் கிரீக், செர்பியா, பல்கேரியா பகுதிகளில் என்ன நடக் குமோ என்று பயத்தில் உறைந்து போயிருந்தனர். ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் பாக்தாத் ரெயில்வே ஈராக்கில் இரயில் பணிகளைச் செய்தது. இந்த பணி ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தாலும், பிரிட்டன் உலகப்போரை முன்னிட்டு இரயில்வே பணியால் கவலையுற்றிருந்தது.
கான்ஸ்டாண்டிநோபிள் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் கூடவே துருக்கியில் இஸ்மிர் என்ற நகரமும் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்கள் துருக்கி தேசிய அமைப்பு என்ற ஒன்றைத் தொடங்கி துருக்கி சுதந்திரப்போர் என்று நடத்தி வெற்றி பெற்றார்கள். முஸ் தஃபா கெமால் பாஷா என்பவர் தலைவராய் இருந்தார். ஓட்டோமான்களின் கடைசி சுல்தான் ஆறாம் மெஹ்மெத் வஹ்தெத்தின் நிராகரிக்கப்பட்டார். சுல்தான் 1922 நவம்பர் 1 ல் ராஜினாமா செய்து விட்டு துருக்கியை விட்டு வெளியேறினார். துருக்கி தனி நாடாக 1923 ஜூலை 24 ல் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது.
1974 ல் ஓட்டோமான் பேரரசின் வாரிசுகளுக்கு துருக்கி அரசு, நாட்டுப்பிரஜைகளாக அங்கீகாரம் அளித்தது. ஓட்டோமான் இளவரசர் மெஹ்மெத் அப்துல் காதி ரின் மகன் மெஹ்மெத் ஓர்ஹன் 1994 ல் இறந்துபோனார். ஓட்டோமான் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதின் பேரரும், அழிந்துபோன ஓட்டோமான் பேரரசின் மூத்த உறுப்பினருமான எர்துகுல் ஒஸ்மான் மட்டும் இருந்தார். இவர் துருக்கியின் பாஸ்போர்டை கூட பெறவிருப்பமில்லாமல் தான் இன்னும் எங்கள் மூதாதைய ரின் ஓட்டோமான் பேரரசைச் சேர்ந்தவன் தான் என்று கூறிவந்தார். மீண்டும் ஓட் டோமான்கள் ஆட்சி வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு, அவர், தேவையில்லை துருக்கி ஜனநாயக முறையில் நன்றாகவே இருக்கிறது என்றார். 1992 ல் அவர் முதல் முறையாக துருக்கி திரும்பி, துருக்கிப் பிரஜையாகவும் ஆகி, துருக்கி பாஸ்போர்டையும் பெற்றுக் கொண்டார்.
2009 செப்டம்பர் 23 ல் எர்துகுல் ஒஸ்மான் தனது 97 வது வயதில் இஸ்தான்புல் நகரில் கடைசி சுல்தான் வாரிசாக இருந்து இறந்து போனார். சுல்தான் அப்துல் மெஸித்தின் இரண்டாவது மகன் பயேஸித் ஒஸ்மானின் இளைய பேரர் யாவுஸ் செலிம் ஓஸ்கூர் என்பவர் சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்தவராக (அதாவது பட்டத்திற்கு உரியவர் அல்ல) இன்னும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக