செவ்வாய், 30 டிசம்பர், 2014

ஓட்டோமான்கள் வரலாறு 10


1878 ல் ஆஸ்ட்ரியாவும், ஹங்கேரியும் தாமதம் காட்டாமல் ஓட்டோமான் மாகாணங்களான போஸ்னியா ஹெர்ஸிகோவினா மற்றும் நோவிபஸர் பகுதிகளை ஆக்கிரமித்தன. ஓட்டோமான் பேரரசு அதைத்தடுத்து தனது படைகளை நிறுத்திக் கண்காணித்தது. ஆஸ்ட்ரியாவும், ஓட்டோமானும் ஏறக்குறைய 30 ஆண்டுகள் 1908 வரை அந்த மாகாணங்களில் படைகளை நிறுத்தி இருந்தன. ஆஸ்ட்ரியா ஓட்டோமான் பேரரசில் அரசியல் அதிகாரம் பெற்றபோது, இளம் துருக்கி புரட்சிப்படையுடன் போஸ்னியாஹெர்ஸி கோவினா சேர்ந்து கொண்டது. ஓட்டோமானுடன் போரைத் தவிர்க்க உடன் நோவிபஸரிலிருந்து இராணுவத்தை பின் வாங்கிக் கொண்டது. 1878 ல் பெர்லின் தலையீடு ஓட்டோமானில் இருக்கும் போது, பிரிட்டன் பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி சைப்ரஸ் நிர்வாகத்திற்காக ஓட்டோமானை ஆதரித்தார். அதேபோல் 1882 ல் ஓட்டோமான் பேரரசு முதல் உலகப் போரில் மத்திய சக்தியை ஆதரிக்க விருப்பம் தெரிவித்திருந்ததால் எகிப்தில் ஏற்பட்ட ‘உராபி’ கலவரத்திற்கும் பிரிட்டன் படைகளை அனுப்பி உதவியது. 1881 ல் பிரான்சு தன் பங்குக்கு துனிஷியாவை அபகரித்துக்கொண்டது.
இந்த சுதந்திரமயமாக்கப்பட்ட மாகாணங்களின் விவகாரம் ஆரம்பத்தில் பெரிய சாதனையாகவும், அமைதிக்கும், நிரந்தர ஆட்சிக்கும் வழி ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், பங்கு பெற்றவர்களின் அதிருப்தி 1914 ல் உலகப்போரில் எதிரொலித்தது. செர்பியா, பல்கேரியா மற்றும் க்ரீஸ் பயன்பெற்றிருந்தாலும், அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார்கள். அப்போதைய ஓட்டோமானின் பேரரசர் ‘ஐரோப்பாவின் நோயாளி’ (SICK MAN OF THE EUROPE) என்று வருணிக்கப்பட்டு, அமைதியற்ற உள்நாட்டு நிலவரம், கடும் தாக்குதல்கள், பலவீனமான அரசு என்று ஆகிப்போனார். ஆஸ்ட்ரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே இருந்த நீண்டநாள் பகை பால்கனின் தேசியமயமாக்கலுக்கு தடையாகவே இருந்தது.  பெர்லின் காங்கிரஸ் இஸ்தான்புல்லை ஓட்டோமான் பேரரசில் இணப்பதில் வெற் றி கண்டது. பெர்லின் காங்கிரஸ் இதற்கு முன் பல்கேரியா உடன்படிக்கை மூலம் சுதந்திரம் பெற்றிருந்த பகுதிகளை ஓட்டோமான் பேரரசிடமே, குறிப்பாக மாசிடோ னியாவை திரும்ப ஒப்படைத்தது. இதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பி முதல் பால் கன் போர் நடந்தது. இதில் ஓட்டோமான்கள் தோல்வி அடைந்து பெரும்பாலான ஐரோப்பிய பிரதேசங்களை இழந்தார்கள்.
இதனால், ஓட்டோமான் பேரரசு நிலப்பரப்பு, இராணுவம், வளமை ஆகியவற்றில் சுருங்கியது. அதிகமான பால்கன் முஸ்லீம்கள் சுருங்கிப்போன ஓட்டோமான் பகுதிகளிலும், அனடோலியாவின் முக்கிய பகுதிகளையும் நோக்கி குடிபெயர்ந் தனர். ஓட்டோமான் பேரரசில் முஸ்லீம்கள் க்ரீமியா, பால்கன், காகசஸ், தென் ரஷ்யா மற்றும் ருமேனியாவின் சில பகுதிகளில் அதிகமாக இருந்தனர். இதில் பலவற்றை பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் ஓட்டோமான் இழந்திருந் தது. அனடோலியாவும், கிழக்கு த்ரேசும் மட்டும் முஸ்லீம் பிரதேசமாக இருந்தது. 1880 எகிப்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. 1882 ல் பிரிட்டன், பிரான்சு போர்க் கப்பல்கள் அலெக்ஸான்ட்ரியா துறைமுகத்தின் அருகில் இருந்து ‘கேதிவ்’ என்ற பிரிவினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு ஐரோப்பாவின் எதிர்ப்பாளர்களை தடுத்துக்கொண்டிருந்தனர். மேலும் எகிப்தைக் ஆக்கிரமித்து சீரமைப்பதாகக் கூறியது.
அர்மேனியர்கள் தங்களுக்கும் ஒத்துக் கொண்டது போல் சுதந்திரம் அளிக்க வேண்டுமென்று ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அழுத்தம் கொடுத்தன. இதனால், சுல்தான் இரண்டாம் ஹமீத் என்பவர் கிழக்கு அனடோலியாவில் ஹமீ தியா பகுதியில் படை நிறுத்தினார். முறையற்ற குர்து இனத்தவரைப் படையில் சேர்த்து 1894 லிருந்து 1896 வரை 100,000 லிருந்து 300,000 அர்மேனியன்கள் வரை கொல்லப்பட்டு சரித்திரப்புகழ் பெற்ற ‘ஹமீதிய படுகொலை’ நடத்தப்பட்டது. அர் மேனிய போராளிகள் இஸ்தான்புல் நகரில் ஓட்டோமான் வங்கியின் தலைமை அலுவலகத்தைச் சிறைப்பிடித்து ஐரோப்பாவின் கவனத்தை ஈர்த்தனர். ஆனால், அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக