வெள்ளி, 10 ஜூலை, 2015

மொகலாய வரலாற் 26

சிவாஜியின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வந்த ஔரங்கஸேப் இளவரசர் முஃஅஸ்ஸிம் தலைமையிலும், துணைக்கு புகழ் பெற்ற தளபதி சர்தார் ஜஸ்வந்த் சிங்குடன் சிறப்பான படை ஒன்றை சிவாஜியை எதிர்க்க அனுப்பினார். ஆனால் அவர்கள் எடுத்த நடவடிக்கை யில் எந்த பலனும் இல்லாததால், ஔரங்க்ஸேப் திருப்பி அழைத்துக் கொண்டார். பின்னர் ராஜா ஜெய்சிங் மற்றும் தலேர் கான் தலைமையில் மேலும் சிறந்த தளபதிகளுடன் மீண்டும் அனுப்பினார். அவர்கள் சிங்கார் மற்றும் புரந்தர் பகுதிகளை வென்றார்கள். மேலும் மொகலாயர்கள் முன்னேறுவதை கண்ட சிவாஜி இனி பயனில்லை என்று சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வந்தான். அது மட்டும் ஆகாது என்று தன் ராஜா என்ற கௌரவத்தை துறந்து கொள்வதாக் அறிவித்து ராஜா ஜெய்சிங் தங்கியிருந்த கூடாரத்திற்கு வந்தான். சமாதானத்தின் தீர்வாக தன் வசமிருக்கும் 23 கோட்டைகளை மொகலாயர்களுக்கு கொடுத்து விட்டு, 12 கோட்டைகளை தான் ஜாகீர் அந்தஸ்தில் வைத்துக் கொள்வதாகவும், கொங்கன் பகுதியின் ஆண்டு வருவாய் நான்கு லட்சமும், பலாகாட்டில் ஐந்து லட்சமும் கிட்டும் பட்சத்தில் ஆண்டுக்கு நாற்பது லட்சம் ரூபாய் பதிமூன்று தவணைகளில் ஔரங்கஸேப்புக்கு செலுத்துவதாகவும், பதிலுக்கு பிஜப்பூரை சிவாஜியின் வசம் கொடுக்கப்பட வேண்டும். சிவாஜியின் மூத்த மகனுக்கு ஐந்தாயிரம் குதிரைகளின் பொறுப்புத் தகுதி தரவேண்டும். ஔரங்கஸேப் எதிரிகளை எதிர்த்துப் போரிடும் போது, தன் வீரர்களுடன் தானும் கலந்து கொள்வதாகவும் முடிவானது. தளபதி ராஜா ஜெய்சிங் மேற்படி ஒப்பந்தங்களை ஆலம்கீரின் பார்வைக்கு அனுப்பினார். மூன்று மாதகாலத்திற்குள் சிவாஜி சரணடைந்து ஒப்பந்தத்தை நிறை வேற்ற வேண்டும் என்று முடிவானது. சிவாஜியும், மொகலாயர்கள் பிஜப்பூர் சுல்தானுக்கு எதிராக நடத்திய போரில் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செய்தான்.
புரந்தர் ஒப்பந்தமாகி ஆறு மாதங்கள் கடை பிடிக்கப்பட்டதற்குப் பிறகு தான் ராஜா ஜெய்சிங் பிஜப்பூரின் போரில் கவனம் செலுத்தினார். சிவாஜி யும் டெக்கான் பகுதியில் மொகலாயர்களின் வெற்றிக்கு பாடுபட்டான் அல்லது பாடுபடுவது போல் நடித்தான். இரண்டாயிரம் குதிரைவீரர் களுடனும், ஏழாயிரம் காலாட்படையுடனும் கலந்து கொண்டான். பன் ஹாலா என்ற பகுதியின் போரில் அதை வெற்றி கொள்ள முடியா விட்டாலும், பல பலம் வாய்ந்த பகுதிகளை வெல்ல உதவி புரிந்தான். இதை கௌரவிக்கும் விதம் ஔரங்கஸேப் அவனுக்கு பொன்னால் அலங்கரிக்கப்பட்ட வாளும், சிறப்பு அங்கியும் கொடுத்தார். மொகலாய அரண்மனையில் சிவாஜியை சந்திக்க பேரரசர் அழைத்தார். அவனது புத்தியைப் போலவே சிந்தித்த சிவாஜி தனக்கு பாதுகாப்பு அளிப்பதாக இருந்தால் தான் பேரரசரை சந்திப்பதாகக் கூறினான். தனது பிரதேசத்தை தன் தாயார் ஜீஜிபாய் வசம் ஒப்படைத்து, மேலும் மூன்று சிறப்பு அதிகாரிகளை தாயாரின் துணைக்கு வைத்து விட்டு, 1666 மார்சில் மகன் சம்பூஜியுடன் பேரரசரை சந்திக்க ஆக்ரா வழியாக கிளம்பினான். தலை நகரில் சிவாஜியை ராஜா ஜெய்சிங்கின் மகன் வைஸ்ராய் ராம்சிங்கும், அமிர் முக்லிஸ் கானும், இரண்டு மொகலாய அதிகாரிகளும் வரவேற்ற னர். இவன் சென்ற நேரத்தில் தான் ஔரங்கஸேப்புக்கு ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சிவாஜியை ராம்சிங் தர்பாருக்கு அழைத்துச் சென்றான். சிவாஜியும் ஔரங்கஸேப்புக்கு 1,500 தங்கத்துண்டு களை காணிக்கையாகவும், 6000 ரூபாய் பரிசாகவும் கொடுத்தான். நடைமுறை சந்திப்பு முடிந்த பிறகு, ஔரங்கஸேப்பும் தகுதி எனப்படும் மொகலாய மன்சாபாக 5000 குதிரைகளின் தகுதியை சிவாஜிக்குக் கொடுத்தார். இப்பெருமைகளால் தன்னிலை மறந்த சிவாஜி பெருமை கொண்டு, தானும் பேரரசருக்கு இணையானவன் போல் கருதி கொண்டு மூன்றாம் தர (THIRD DEGREE) நிலைபாட்டில் தர்பாரில் அனைவர் முன்பும் செயல்பட்டான். ஒரு பேரரசர் வயதில் மூத்தவர் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் நடந்தான். சிவாஜியின் இக்கீழ்தரமான நடவடிக்கைப் பற்றியும் ஆய்வாளர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார் கள். இது பரம்பரையாக சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வரும் ஔரங்கஸே புக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. கொள்ளையடித்தும், கொலை செய்தும் குறுக்கு வழியில் வந்து ஒரு சிறு பிரதேசத்தை ஆட்சி செய்த சிவாஜியின் செயல் தர்பாரின் கௌரவத்தைக் குலைத்து அவமானப் படுத்தியதாகக் கருதப்பட்டு அவனுக்கு வழங்கப்பட இருந்த கௌரவம் பறிக்கப்பட்டது. இதற்கு முன்பு 5000 மன்சாப்புகள் கௌரவம் ஜஹாங்கீ ரால் உதைய்பூரின் ராஜா ராய்கரணுக்கும், ஷாஜஹானால் சிவாஜியின் தந்தை ஷாஜிக்கும், ஔரங்கஸேப்பால் ராணா ராஜ் சிங்குக்கும் வழங்கப் பட்டிருந்தது. தற்போதைய தளபதி ராஜா ஜெய்சிங்குக்கு 5000 மன்சாப் வழங்கப்பட்டு, மராட்டியர்கள் மீது சிறந்த நடவடிக்கை எடுத்த காரணத் தால் 7000 மன்சாபுகளுக்கு உயர்த்தப்பட்டார். இவர்களின் தரத்திற்கு இணையில்லாவிட்டாலும் ஆலம்கீர் சிவாஜியை 5000 மன்சாப் வழங்கி இருந்தார். அதைக் கெடுத்துக் கொண்டான். மொகலாய சட்டப்படி தர்பாரில் இருந்தவர்கள் சிவாஜியை வீட்டுக் காவலில் வைத்தார்கள். 
விடுதலை வேண்டி விண்ணப்பித்த அனைத்து மனுக்களையும் ஔரங்கஸேப் புறந்தள்ளினார். கோல்கொண்டாவை வெல்ல உதவுவதாகவும் தன்னை விடுவிக்க வேண்டியும் கோரினான். அப்படியும் ஔரங்கஸேப் ஒப்புக்கொள்ளவில்லை. தனிமையில் சந்திக்க கோரிய தையும் அவர் ஏற்கவில்லை. சிவாஜியின் குடும்பத்தினரின் மீதான ஔரங்கஸேபின் கருணை காலத்தால் போற்றத்தக்கது. மிர்சா ராஜா ஜெய்சிங்கின் சிபாரிசின் பேரில் சிவாஜியின் மகன் சம்பூஜிக்கும், மருமகன் நதூஜிக்கும் தலா 5000 மன்சாபுகளை வழங்கினார். சாஹூஜி என்பவருக்கு 7000 மன்சாபுகளும், ராஜா என்ற அந்தஸ்தும் வழங்கினார். சிவாஜியின் குடும்பத்தினரும் ஔரங்கஸேப் மீது அளவு கடந்த மரியாதை செலுத்தி னர். சிவாஜி சில நாட்கள் நோய்வாய்பட்ட்து போல் இருந்தான். அதன் பிறகு தன் பிராமண பெரியவர்களுக்கு அன்பளிப்பு செய்வது போல் பழக்கூடைகளை அனுப்பினான். கருணை உள்ளம் கொண்ட ஔரங்க ஸேப் வேதக்காரர்களுக்குச் செல்வதால் அவற்றை சோதனை செய்து அவமானப்படுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால், குணத்தில் நரி என்றுமே நரி தான் என்பது போல் இரு பழக்கூடைகளில் சிவாஜியும் அவன் மகன் சம்பூஜியும் தப்பிச் சென்றார்கள். ஆக்ராவிலிருந்து ஆறு மைல் தொலைவில் இவர்களுக்காக காத்திருந்த குதிரைகளில் ஏறி மதுரா சென்றார்கள். மொகலாய காவலர்களிடமிருந்து தப்பிக்க கிழக்குப் புறமாக பெங்கால், ஒரிஸ்ஸா மற்றும் கொண்ட்வானா பகுதியாகச் சென்றார்கள். ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு தனது தலைநகருக்கு வந்தான். ராம் சிங்கின் உதவியுடன் தான் சிவாஜி தப்பித்தான் என்பதை பின்னால் தெரிந்து கொண்ட ஔரங்கஸேப் அவனின் பதவி சொத்துக் களைப் பறித்து தண்டனை கொடுத்தார். 
மொகலாயர்கள் பிஜப்பூரை வெற்றி கொண்டது சாதாரணமாக இல்லை. சிவாஜிக்கும் பிஜப்பூரின் மீது ஒரு கண் இருந்த பட்சத்தில் சாதுரியமாக அவனை திசைத் திருப்பி, புரந்தர் ஒப்பந்தத்தின் மூலம் அவனை வைத்தே பிஜப்பூரை வென்றது முழுக்க முழுக்க ராஜா ஜெய்சிங்கின் இணை யில்லாத ராஜதந்திரமே. அதன் வெற்றி அவரையே சாரும். அதன் பிறகு அவர் டெக்கானுக்கு அழைக்கப்பட்டு இறந்து போனார். ராஜா ஜெஸ்வந்த் என்றுமே பேரரசுக்கு ஆதரவாய் இருந்ததில்லை. அவர் மராட்டியர்களின் உயர்வையே விரும்பினார். மொகலாய இளவரசரால் தலேர் கான் வெறுக்கப்பட்டார். அதனால் அவர் பிதாருக்கு மாற்றப்பட்டார். இளவரச ரால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது. மேலும் பஞ்சாப் பகுதியில் பெர்ஷியர்களின் ஊடுருவல் இருந்ததால் அங்கு ஒரு படை அனுப்பப் பட்டது. இடையில் ஓராண்டாக பெஷாவரில் யூசுஃப்ஸைஸ் என்பவரின் புரட்சி வேறு இருந்தது. இவையெல்லாம் தப்பி வந்த சிவாஜிக்கு சாதக மாக இருந்ததால் அவன் நேரடியாக ஔரங்கஸேப்பை எதிர்க்க எண்ணினான். 1669 வரை அமைதியாக இருந்து நிர்வாகத்தை சீர்படுத்தினான்.
 சிவாஜியின் நண்பரான ராஜா ஜெஸ்வந்த் சிங் மூலம் ஔரங்கஸேப்பிடம் சமாதானம் பேசப்பட்டது. அதில் மஹாராஷ்டிராவை ராஜா என்ற அந்தஸ்துடன் சிவாஜி தனியாக ஆண்டு கொள்ளலாம் என்றும், மேலும் ஒரு ஜாகிர் (இராணுவம் மற்றும் நிர்வாக அந்தஸ்தில் உள்ள) அந்தஸ்தில் பிராரில் ஓர் இடமும், மகன் சம்பூஜிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மன்சாபை தொடரவும், சிவாஜியின் அனைத்து கோட்டை களை திரும்ப ஒப்படைப்பதாகவும் இது 1668 லிருந்து 1670 வரை செல்லுபடி யாகும் என்று இருந்தது. அதேநேரத்தில் பிஜப்பூர் சுல்தானுடனும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஔரங்கஸேபால் போடப்பட்டது. அதில் சுல்தான் ஷோலாபூரை மொகலாயர்களுக்கு திருப்பித்தருவதாகவும், மேலும் 1,80,000 பகோடாக்கள் வருமானம் வரும் ஒரு இடத்தையும் தருவதாகவும் போடப்பட்டது. சிவாஜி இது தான் தருணம் என்று பிஜப்பூர், கோல் கொண்டாவிலுள்ள சாவூத் மற்றும் சுர்தேஷ்முகி ஆகிய இடங்களையும் கேட்டான். அது அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் ஆண்டுக்கு பிஜப்பூர் 3.5 லட்சமும், கோல்கொண்டா 5 லட்சமும் மொகலாயர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் முடிவானது. 1670 ல் மீண்டும் சிவாஜி மொகலாயர் களின் கோட்டைகளின் மீது படையெடுத்தான். சிங்கார், புரந்தர், மஹூலீ, கர்னல்லா மற்றும் லோஹ்கர் பகுதிகளைப் பிடித்தான். சிவாஜியைத் தடுப்பதில் மொகலாய அதிகாரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியது. மொகலாயர்கள் சாவூத் மற்றும் சுர்தேஷ்முகியை மீட்டனர். சிவாஜி சூரத்தைத் தாக்கி பெரும் கொள்ளையடித்தான். மொகலாயர் களுக்கு எதிராக பெரும் சக்தியாக இந்துக்களுக்கு தெரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக